• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.வட்டுக்கோட்டையில் பாரிய விபத்து: 2 இளைஞர்கள் படுகாயம்!

Mrz. 6, 2022

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (05-03-2022) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து கார் ஒன்றினை முந்திச் சென்றவேளை எதிரே வந்த பேருந்துவுடன் மோதியதினாலே சம்பவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த அராலியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்துவின் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed