• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொடிகாமத்தில் டெங்கு காய்ச்சல். குழந்தை உயிரிழப்பு

Mrz 6, 2022

யாழ். கொடிகாமம், மீசாலை வடக்குப் பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக வாகீசன் விதுசன் என்ற ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கடந்த 6 நாட்களாக காய்ச்சல் காரணமாக குழந்தைக்கு ஆயுள்வேத வைத்தியம் செய்தபின் நேற்று பிற்பகல் ஐந்து மணிக்கு சாவச்சேரி வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டது.

இதையடுத்து மேலதிக சிகிச்சைக்கு குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

எனினும் குழந்தை சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்தான் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது

டெங்கு காய்ச்சல் காரணமாகவே குழந்தையின் இறப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இறப்பு விசாரணையை இன்று மேற்கொண்டார்.

இதேவேளை, காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed