ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வழங்கி ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
அதேபோன்று ரஷ்யா மீது அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்து வருகின்றன. அந்தவகையில் பிரான்சும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், தங்கள் நாட்டு மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையிலான வான்வெளிப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவசியமில்லை எனில் ரஷ்யாவை விட்டு வெளியேறுங்கள் என பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.