• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் அதிகாலை கோரம்! ஒருவர் பலி 3 பேர் ஆபத்தான நிலையில்

Mrz 2, 2022

யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மகேந்திராவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் கோப்பாய் காவல்துறையினர் விபத்துடன் தொடர்புபட்ட வாகனங்களை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed