கரவெட்டி பகுதியில் பல காலமாக கடை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றய தினம் முன்னிரவு 10.30 மணியளவில் கரவெட்டி சம்பந்தர் கடையடி சந்தியில் உள்ள கடையை உடைப்பதற்காக முயற்சியில் ஈடுப்படிருந்த நபர்களை பொதுமக்கள் சேர்ந்து மடக்கி பிடித்துள்ளார்கள். கடையின் கூரை மீதிருந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கீழே இருந்த மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்கள் நையப்புடைக்க பட்ட பின்னர் நெல்லியடி போலீசிடம் ஒப்படைக்கப்படார்கள்.
பின்னர் இது தொடர்பாக மேலும் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இவர்கள் கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 20 வயதுக்கு குறைவானவர்கள் என்று தெரியவருகிறது
குறித்த கடையானது கடந்த 2-3 மாதங்களில் 2 தடவை உடைத்து திருடப்பட்ட நிலையில் கடை உரிமையாளர் பாதுகாப்பு கமெராவை கடையில் பூட்டியிருந்துள்ளார். இந்தநிலையில் லண்டனில் உள்ள கடை உரிமையாளரின் மகள் திருடர்கள் கடை உடைப்பதை கமெராவில் அவதானித்து தந்தைக்கு தெரியப்படுத்தியதையடுத்து ஊர் மக்களின் உதவியுடன் திருடர்கள் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த காலங்களில் கரவெட்டி பகுதியில் உள்ள அரசடி சந்தி மற்றும் சம்பந்தர் கடை பகுதியில் உள்ள கடைகள் பலமுறை உடைத்து திருடப்பட்ட நிலையில் திருடர்களை பிடிக்க முடியாது இருந்துள்ள நிலையில் நேற்றய தினம் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது