• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்!!

Mrz 1, 2022

இருவேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலை நாட்டுவதற்கான தெரிவுப்போட்டி மற்றும் தனிநபர் புயப்போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளது.

தமிழர்களின் புராதன கலைகளில் ஒன்றான சிலம்பு சுற்றுதலில் கின்னஸ் சாதனை நிலைநாட்டும் முகமாக முதற்கட்டமாக உலக சாதனையை நிலைநாட்டும் தெரிவுப் போட்டி 8 நாடுகளை உள்ளடக்கி ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த போட்டியின் விதிமுறையாக மூன்று மணித்தியாலங்கள் இடைவிடாது சிலம்பு சுற்றுவதோடு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு படிமுறைகளில் சிலம்பு சுற்றுதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்.

தனிநபர் புயப் போட்டிக்காக இரண்டு மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் வவுனியாவைச் சேர்ந்த 8 வயது மாணவன் 4 நிமிடம் 30 வினாடிகளில் 390 புயப்புக்களை மேற்கொண்டுள்ளார். குறித்த போட்டி நிகழ்வுகள் யாவும் மெய்நிகர் வழியின் ஊடாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed