• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! 10 பேர் உயிரிழப்பு

Feb. 28, 2022

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்பு குழு தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன. இதில், ஞாயிற்றுக்கிழமை வரையில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேரைக் காணவில்லை எனத் தேடுதல் மற்றும் மீட்பு குழுவின் தலைவரான ஆக்டாவியன்டா தெரிவித்துள்ளார்.

சேறு நிறைந்த பகுதியால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படக் கூடிய சாத்தியங்களும் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed