• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நெஞ்சைத் துளைக்கும் உக்ரைன் புகைப்படம்!

Feb 27, 2022

உக்ரைன் நாட்டின் கியேவ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு அழகான இளம்பெண் தன் காதலனைச் சந்தித்துள்ளார். அவளது கண்களில் விடைதெரியாத பயம். இது பிரிவா அல்லது முடிவா? என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறாள். அவளை அந்த இளைஞர் தேற்றுகிறார். இந்தப் புகைப்படம்தான் தற்போது ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டின் போர் ஆயுதப்படைகளை குறி வைத்தே நாங்கள் தாக்கிவருவதாகவும் குடியிருப்பு பகுதிகளை ஒருபோதும் நெருங்க மாட்டோம் என்று ரஷ்யா விளக்கம் அளித்திருக்கிறது. எப்படியிருந்தாலும் அதுவும் அழிவுதானே என்று நமக்கு கேள்வி எழலாம். எங்கோ விழுகிற குண்டுமழை தவறி குடியிருப்பில் விழுந்துவிட்டால் என்னாவது? உக்ரைன் மக்களுக்காக போராடும் அந்நாட்டு இராணுவ வீரர்களின் கதி என்ன? இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்வி எழுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் 3 ஆம் உலகப்போரை தூண்டும் அளவிற்கு மிகப் பெரிய ஒரு சர்ச்சை உக்ரைனில் வெடித்திருக்கிறது. இந்நிலையில் குண்டுமழைக்கு நடுவிலும் ஒரு காதல் தனது ஆத்மார்த்தமான நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது. எப்படியாவது கடந்து வந்துவிடுவோம் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் காதல், நம்பிக்கை, எதிர்பார்ப்பு என உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கும் இந்தப் புகைப்படம்தான் தற்போது பலரது கவனத்தை ஈர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed