• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் !

Feb 27, 2022

மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம்.

இதுதவிர பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய சத்துக்கள் வேர்க்கடலையில் அடங்கியுள்ளன.

இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.

இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் உண்டு.

தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. தற்போது வேர்க்கடலை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.

* குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. முக்கியமாக இதனை அவித்து உண்ணும்போது ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சக்தி இன்னும் பெருகுகின்றது. உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிக்கல் செல் அழிவினை ஏற்படாமல் காக்க ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

வேர்க்கடலையில் அதிக அளவு வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உங்களின் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் இ மிக மிக முக்கியமான ஒன்று.மேலும் ப்ரோடீன் மற்றும் வைட்டமின் இ உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கின்றது.

* வேர்க்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.மேலும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது.

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed