• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை.

Feb. 27, 2022

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ( Upul Dharmadasa)  தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

„இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர், பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்திக்கொண்டமையானது பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கருதப்படும்.

இறுதி 6 மாத காலப் பகுதிக்குள் கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டமைக்கான எழுத்துமூல ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவு போதுமானது.

கொவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவை மாத்திரம் செலுத்திக்கொண்ட நிலையில், 6 மாதங்களுக்கு முன்னர், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அவ்வாறான பயணிகள் கொவிட் பரிசோதனையை செய்ய வேண்டும்.

பூரண தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத ஏனைய பயணிகள், இலங்கைக்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் கொவிட் பரிசோதனை செய்வது கட்டாயமானது” என்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed