• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் தாக்குதல்; பரிதாபமாக உயிரிழந்த நபர்

Feb 25, 2022

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டள்ளதாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்  பிரித்தானிய நேரம் 23.26 மணியளவில் ரிவியூ வீதிக்கும் ஹீதர் வீதிக்கும் இடையில், NW2 சந்திக்கு அருகே ஒரு பெரிய மோதல் இடம்பெற்றதாக பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற காவற்துறையினர், கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை மீட்டு அவசர சிகிச்சை வழங்கிய போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ள பெருநகர பொலிசார், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை இன்று காலை கைது செய்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொலை தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக தெரிவித்த, மெற் பொலிஸின் குற்றவியல் பிரிவு சிரேஸ்ட அதிகாரியும் விசேட நிபனருமான Dave Whellams, அது குறித்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

மேலும் சம்பவம் இடம்பெற்ற போது, காணொளியாகவோ, ஒளிப்படமாகவோ எவராவது ஆதாரங்களை பெற்றிருந்தால் அதனை மெற் காவற்துறைக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed