• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்னாகும்?

Feb. 25, 2022

வலது கண், தோள், தொடை துடித்தால் ஆண்களுக்கு நன்மையுண்டாகும். இதே போல பெண்களுக்கு இடது கண், தோள், தொடை துடித்தால் நல்லது. அனுமன் துாது புறப்பட்டபோது அசோகவனத்தில் இருந்த சீதையின் இடக்கண் துடித்ததாக கம்பர் குறிப்பிடுகிறார். நல்ல சகுனமான இதை அறிந்த சீதை மகிழ்ந்தாள்.நாம் பலரும் பல வகையான மூட நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகிறோம். சில மூட நம்பிக்கைகள் நமக்கு தேவையற்றதாக தெரியும். இருப்பினும், தெரிந்தோ தெரியாமலோ பலரும் பின்பற்றியே வருகிறோம். சில மூட நம்பிக்கையில் நன்மைகள் கூட இருக்கும். அப்படிப்பட்ட ஒன்று தான் இது…Contents hide1 கண்கள் துடிக்கக் காரணங்கள்2 கண் துடித்தால் அபசகுணமா?

அது என்னவென்றால் கண்கள் துடிப்பது தான். கண்கள் துடிப்பது உண்மையில் நல்லதா..கெட்டதா..? எந்தக் கண் துடிப்பது யாருக்கு நல்லது?

எந்த கண் துடித்தால் ஆண்களுக்கு நல்லது… எந்த கண் துடிப்பது பெண்களுக்கு கெட்டது…? கண்துடிப்பதை எப்படி நிறுத்துவது என பல வகையான கேள்விகளுக்குப் பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கண்கள் துடிக்கக் காரணங்கள்

நம் கண்கள் துடிக்க காரணங்கள் என்ன என இப்போது காணலாம். இதனை ஆங்கிலத்தில் யோகிமியா (myokymia) என்று அழைப்பார்கள். கண்களில் உள்ள தசைகள் / நரம்புகள் இழுப்பது போன்ற நிலை ஏற்படுவது தான் கண் துடிப்பது.

கண்கள் துடித்தால் பல வகையான பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக வலது கண் துடிப்பதால் நினைத்தது அப்படியே நடக்கும் என்றும், வலது புருவம் துடித்தால் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் என்றும், வலது கண் இமை துடிப்பதால் மகிழ்ச்சியான செய்தி வரும் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கண்ணின் நடுப்பக்கம் துடித்தால் உங்களின் துணையைப் பிரிந்து விடுவீர்கள் என்றும், இடது கண் இமை துடிப்பதால் அதிக கஷ்டங்கள் வரும் என்றும், இடது புருவம் துடிப்பதால் குழந்தைப் பிறப்பு நடக்கும் என்றும், வலது கண் கீழ் பக்கம் துடித்தால் பழிகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் கூறுகின்றனர்.

பலருக்கு வலது கண் துடிக்கும். ஒரு சிலருக்கு இடது கண் துடிக்கும். அதிலும் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லது என்றும், அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

நமது கண்கள் துடிப்பதற்கு உண்மையான காரணங்கள் இவை தான். “அதிகமான சோர்வு, மன அழுத்தம், கண்கள் வறட்சி, குடிப் பழக்கம் போன்ற காரணிகளால் தான் கண்கள் துடிக்கின்றன” என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது அதிகமாக காபி குடிப்பதாலும் ஏற்படக்கூடும். ஏனெனில், அதிகமாக காபி குடித்தால் குறிப்பாக இரவில் தூங்கும் முன்னர் குடித்தால், தூக்கம் சரியாக வராது. சில நேரங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணங்களாலும் கண் துடிக்கக்கூடும்.

கண் துடித்தால் அபசகுணமா?

உங்களுக்கு அடிக்கடி கண்கள் துடித்தால் அது அபசகுணம் அல்ல. மாறாக இதற்குக் காரணமாக இருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினைகளே. நீண்ட நாட்கள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்று இருந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கின்றன என்று அர்த்தம்.

கண்கள் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், முதலில் நீங்கள் நன்றாக உறங்க வேண்டும். கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுத்தால் கட்டாயம் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி கண்கள் துடிக்கிறது என்பதை நன்மையாகக் கருதாதீர்கள். இது மூளை சார்ந்த பிரச்சினையாகக் கூட இருக்கலாம்.

கண்கள் அடிக்கடி துடிப்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமால் மருத்துவரை அணுகுவது மிக நல்லது. மேலும், கண்களுக்கு வெதுவெதுப்பான நீரால் ஒத்தடம் கொடுத்தால் சற்றே இந்தத் துடிப்பு குறைய தொடங்கும். மேலும், நரம்புகளுக்கு சிறிது ஓய்வும் கிடைக்கும்.

நாம் செய்கின்ற எல்லா விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவதே சிறந்தது. யாராக இருந்தாலும், இது போன்ற விஷயத்தை அபசகுணமாகவோ, நம்பிக்கையாகவோ எடுத்து கொள்ளாமல் சற்றுச் சிந்தித்து செயல்பட்டால் ஆபத்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed