• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்

Feb. 23, 2022

ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் எளிதான பயணம் மேற்கொள்ளலாம்.

ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது.

வருகிற மார்ச்  முதலாம் திகதியில் இருந்து அவற்றை நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி இந்த 27 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், பயணம் மேற்கொள்வதற்கு 14 நாட்களுக்கு முன் தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதுமானது.

 அதேவேளை பெற்றோருடன் வரும் ஐந்து வயதிற்குட்ட குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் மற்றும் கூடுதல் கவனம் என்று ஏதும் தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அழித்துள்ள தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed