• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திடீரென உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை…!

Feb. 21, 2022

ரஷ்யா – உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது.

ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், தங்கத்தின் மீடியம் டெர்ம் இலக்கு 1900 – 1910 என்ற அளவை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் மத்திய வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அடுத்த 3 – 4 மாதங்களில் தங்கம் விலையானது உலக சந்தையில் 2000 டொலர்களை தொடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்திந் தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட போதிலும், இந்த வார இறுதியில் உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடக்கத்தில் தடுமாற்றத்தில் காணப்பட்டு பின்னர் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed