• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்ட‌ முக்கிய அறிவுறுத்தல்!!

Feb. 21, 2022

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.

ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க உரிமை உண்டு.

அத்தகைய விசாரணையின் போது அந்த அதிகாரி முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால், அது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை இருந்தாலும், இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed