உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பாக கல்லீரல் உள்ளது. உள்ளுறுப்புகளில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டதும், தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் உடையது கல்லீரல் தான்.
இத்தகைய கல்லீரல் மாறிவரும் உணவு பழக்கம், கட்டுப்பாடு இல்லாத குடி பழக்கம், மரபியல் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரலில் நீர் கோர்ப்பது, கல்லீரலில் கொழுப்பு கட்டிகள், கல்லீரலில் கிருமிகள் தாக்குவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கல்லீரல் சுமார் 70% பாதிப்பு அடையும் வரை எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாது.
கல்லீரல் பாதிப்பின் மிக முக்கிய அறிகுறிகள் குறித்து காண்போம்
வயிறு வீக்கம்
கல்லீரல் பணிகளில் மிகவும் முக்கிய பணிகளான இரத்தம் உறைவதற்கு Albumin என்னும் புரதத்தை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்புமின் உடலில் குறையும்பொழுது உடலில் அதிக நீர் உற்பத்தியாகும். இந்த நீர் வயிறு மற்றும் கால் பகுதிகளில் தேங்கி வீக்கங்களை ஏற்படும். எனவே தங்களுக்கு வயிறு அல்லது கால் பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கசக்கும் வாய்
கல்லீரல் உணவு செரிமானத்திற்கு தேவையான பையில் என்னும் பித்த நீரை சுரக்கின்றது. கல்லீரல் பாதிப்படையும்பொழுது அளவுக்கு அதிகமான பித்தநீர் சுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பித்த நீர் மிகவும் கசப்பு சுவையுடையது, இந்த பித்த நீர் செரிமான உறுப்புகளில் அதிகம் தேங்கி இருக்கும்பொழுது வாய் கசப்பு தன்மையாக இருக்கும்.
மஞ்சள் காமாலை
கல்லீரல் hepatitis virus என்னும் வைரஸ் கிருமியினால் பாதிக்கப்படும்பொழுது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் கல்லீரலிலேயே தேங்கிவிடுகிறது. இந்த விளைவாக கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும், கைகள் மற்றும் கால்களில் உள்ள நகங்கள் மஞ்சள் நேரத்தில் காணப்படுவது, மற்றும் தோல் பகுதி மஞ்சள் நிறமாக காணப்படும். அதேபோல் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவையெல்லாம் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
தொடர் வாந்தி
கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது செரிமான உறுப்புகளின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஏனென்றால் செரிமானத்திற்கு தேவைப்படும் பல நொதிகள் கல்லீரலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தான் பசியின்மை, தொடர் வாந்தி, பேதி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற அறிகுறிகள் தங்களுக்கு இருக்கிறது என்றால் தங்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.