• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். சுப்பிரமணியம் கனகராசா. 18.02.2022,சிறுப்பிட்டி மத்தி.

Feb 18, 2022

கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் கனகராசா 18.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் மகாஜன கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியரும், சோமாஸ்கந்த கல்லூரியின் முன்னாள் அதிபரும் , தனது சேவையை தொடர்ந்து மேற்கிந்தியா தீவிலுள்ள கஜானா என்னும் இடத்தில் இராசாயணவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி பல மாணவச் செல்வங்களை நல்வழிப்படுத்தி வழிகாட்டியாக திகழ்ந்தார். பின்பு தனது சொந்த நாட்டில் முதியோர் சங்கத்தின் தலைவரும், சிறந்த சமூக சேவையாளாரும் ஆவார். ( இவரது பணிகளாக எமது கிராமத்துக்கு ஒரு தபால் நிலையம், இலங்கை வங்கி போன்றவற்றினை சிறுப்பிட்டி மத்தியில் ஸ்தாபிக்க முழுமுதற் காரணமானவர். உயர்தர கற்ற மாணவர்களுக்கு சிறுப்பிட்டியில் தனது வீட்டில் ஆங்கிலத்தினை இலவசமாக கற்பித்தார். அமரரின் சமூகப்பணி சொல்லில் அடக்கமுடியாது) ருக்குமணிதேவி (ரூபி) அவர்களின் அன்பு கணவரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி சரியாக 11.00 மணியளவில் சிறுப்பிட்டியில் அமைந்துள்ள குடும்ப மாயனத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed