• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நான்காவது டோஸ்!

Feb. 17, 2022

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்கல்விக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற மாணவர் குழுவொன்றுக்கு கடந்த காலங்களில் இவ்வாறான விசேட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்தும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed