• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனியில் கடும் புயல் காற்று

Feb 17, 2022

ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் வட பகுதியில் வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிரான்ஸிலும் பிாித்தானியாவிலும் ஆங்கிலக் கால்வாயை அண்டிய பிரதேசங்களை கடும் புயல் தாக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜேர்மனி நாட்டின் North Rhine-Westphalia, Mecklenburg-Western Pomerania பிரதேசங்களையே புயல் அதிக அளவில் பாதித்துள்ளது. முழுமையான சேதவிவரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. காரின் மீது மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேதக் காட்சிகளைப் பலரும் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

பேர்ளின் தீயணைப்புச் சேவையினர் அவசரகால அனர்த்த நிலையை அறிவித்திருக்கின்றனர். “இலேனியா” (Ylenia) எனப்படும் புயல் இன்று வியாழக்கிழமை காலை முதல் மணிக்கு 152 கிலோ மீற்றர் என்ற வேகத் தில் ஜேர்மனியின் வடக்குப்பகுதிகளைத் தாக்கியுள்ளது. தேசிய புகையிரத சேவை நிறுவனமாகிய டொச்ச பானின் (Deutsche Bahn) தகவலின்படி, பல பகுதிகளில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்துள்ளதால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Bremen, Hamburg, Schleswig-Holstein, Mecklenburg-Western Pomerania, Berlin, Brandenburg பகுதிகளில் நீண்ட தூர புகையிரத மார்க்கங்கள் சேதமடைந்துள்ளதால் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை வரை இந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்காலப்பகுதியில் பயணங்களைச் செய்யப் பயணச் சீட்டுகளை வாங்கியவர்கள்அவற்றைப் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும் என்றும் அல்லது கட்டணம் மீளளிக்கப்படும் எனவும்டொச்ச பான் (Deutsche Bahn) அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக Lufthansaநிறுவனம் 20 வான் சேவைகளை நிறுத்தியுள்ளது. வழமையான சேவை நேரங்களிலும் தாமதங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது

!ஹம்பேர்க் துறைமுகப் பகுதியில் பயணிகள் போக்குவரத்துக் கப்பல் ஒன்றைக் கடும் புயல் அலை தாக்கியுள்ளது. “Tollerort” என்ற கப்பலின் முன் பக்கத்தை தாக்கிய புயல் அலை கண்ணாடிகளை நொறுக்கியவாறு உள்நுழைந்த காட்சிகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. பயணிகள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இதேவேளை, பிரான்ஸின் வடக்குப் பகுதிகளையும் (Hauts-de-France, Normandy) பிாித்தானியாவின் ஆங்கிலக் கால்வாய் பிரதேசங்களையும்”ஈயூநிஸ்” (Eunice) என்ற கடும் புயல் வெள்ளிக்கிழமை தாக்கக் கூடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இதனால் பிாித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. டென்மார்க்கின் தெற்குப் பகுதிகளானSouth Jutland, Funen, South Zealand, Lolland-Falster and Bornholm பகுதிகளை வெள்ளிக் கிழமை இரவு மற்றொரு புயல்தாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed