இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். 5வது பிம்ஸ்டெக் (பல்துறை, தொழில்நுட்ப , பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சிமாநாடு மார்ச் 30ல் கொழும்பில் நடக்கவுள்ளது.
மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தரியவருவதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு கலாசார நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு விமானம் மூலம் செல்வதற்கும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்.விமான நிலையம் போன்றவற்றில் புதுடில்லியின் முதலீடு குறித்து இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடியிருந்தன.
மேலும் கடந்த பெப்ரவரி 7 இல் புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் பீரிஸ் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.