• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நபர் ஒருவரிற்கு காத்திருந்த அதிர்ச்சி

Feb 12, 2022

தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் திருமண வைபவம் ஒன்றுக்காகப் சென்ற நபர் ஒருவரின் உறவினரான வயது முதிர்ந்த ஒருவரின் 5 பவுண் தங்கச் சங்கிலியைச் சன நெருக்கடியில் கொள்ளையிடித்து சென்றதாக முகநூலில் வேதநாயகம் தபேந்திரன் என்பவர் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (1102-2022) இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் குறித்த நபர் ஒரு அதிர்ச்சி தகவலையும் பதிவிட்டுள்ளார்.

அதுகுறித்து தெரியவருவது, தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் நேற்றைய தினம் 60 சோடிகளுக்குத் திருமணம் இடம்பெற்றது. இதன்போது கோயிலின் முன்புறமாக 3 பெண்கள் மடிப்பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் முகங்கள் எமது பிரதேசத்திற்குரியவர்கள் அல்லவெனக் காட்டியது. கைதடியில் சில வருடங்களுக்கு முன்பு கந்தசாமி கோயிலில் தேர்த் திருவிழாவன்று சங்கிலி அறுத்துப் பிடிபட்ட ஒருவரின் சாயல் அதில் தெரிந்தது. ஒரு பெண்ணைக் கேட்டேன் ” நீங்கள் எந்த ஊர் ” அவர் தான் மட்டக்களப்பு என்றார். மட்டக்களப்பில் எந்த ஊர் எனக் கேட்டேன். காத்தான்குடி என்றார்.

காத்தான்குடி முஸ்லீம்கள் வாழும் ஊரல்லவா? காத்தான்குடிக்கு போக முன்னுள்ள ஊர் எது? கடந்த பின்பு வரும் ஊர் எதுவெனக் கேட்டேன். தனக்குக் காத்தான்குடி மட்டும் தான் தெரியுமென்றார். படக்கென்று தான் மானிப்பாய் என்றார். உடனேயே சொன்னேன் நீ நேரத்திற்கொரு ஊர் சொல்கிறாய். மடிப்பிச்சை எடுக்கும் அடுத்த பெண்ணைக் கேட்டேன் நீங்கள் எந்த ஊர். நுவரெலியா என்றார். அங்கு எந்த ஊர் என்றேன். கொட்டகல என்றார். கொட்டகலவுக்கு அயல் ஊர்களைக் கேட்டேன். முழுசினார். அடுத்த பெண்ணைக் கேட்டேன் நீங்கள் எந்த ஊர் ? மானிப்பாய் என்றார். மானிப்பாயில் உங்கள் வீதி எது எனக் கேட்டேன். சுதுமலை வடக்கு என்றார்.

சுதுமலை வடக்கு உங்களது கிராம சேவகர் பிரிவு இலக்கம் என்னவெனக் கேட்டேன். 101 என்றார். ஆனால் அந்த இலக்கம் தவறு. 132 என நினைக்கிறேன். பின்னர் எனக்குத் தெரிந்த பொலிஸ் நண்பர் மூலமாக தொலைபேசி மூலமாக வல்வெட்டித்துறைப் பொலிஸுக்கு முறைப்பாடு செய்தேன். பொலிஸ் வரும் வரையில் உறவினர்களாகியனர்களை அவர்கள் தப்பி செல்லாதவாறு சுற்றிவளைத்தனர் பொலிஸ் வந்து விசாரித்தனர். மானிப்பாய் சொன்ன பெண் தாய், மற்றைய இருவரும் மகள். அவர்களுடன் மடத்தில் நின்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் 5 பவுண் தங்கச் சங்கிலி அவர்களிடம் இருக்கவில்லை. இவர்கள் பெரிய ஒரு வலைப்பின்னல். உடனே பிடித்தால் சரி இல்லாவிட்டால் பொருள் வராது. இவர்களது சொந்த ஊர் நீர்கொழும்பு புத்தள எல்லையிலுள்ளது. கொவிட் – 19 தடுப்பூசி அட்டையில் குறித்த தகவல் இருந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed