• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காதலர் தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டம்!!

Feb 11, 2022

காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இம்மாதம் 14ஆம் திகதி ‚காதலுக்காக ஒரு செடி‘ என்ற தொனிப்பொருளின் கீழ், மர நடுகை திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சு, பாதுக்க பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி மன்றம் ஆகியன இணைந்து இந்த மர நடுகை திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்தவுள்ளன.

கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதே போன்ற மர நடுகை நிகழ்ச்சி திட்டம் நடத்தப்பட்டு, அன்றைய தினத்தில் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed