• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோண்டாவில் பகுதியில் சுவிஸிலிருந்து வந்த‌ குடும்பத்திடம் கொள்ளை!!

Feb 10, 2022

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்கநகைகள், சேலைகளை அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர்.

அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed