பிரித்தானிய தலைநகர் லண்டனில் பெண்ணொருவர் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக சோப்பு நுரைகள் நிறைந்த போத்தல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் லண்டனில் வசித்து வரும் 32 வயதான Khaoula Lafhaily என்ற பெண் கடந்த ஜனவரி மாதம் 24-01-2022 ஆம் திகதி ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் iPhone 13 Pro Max ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் அதற்கு அவர் முன்பணமாக £1,500 யூரோ கொடுத்து ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த இரண்டு நாட்களில் ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்படும் என்று அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனையடுத்து, டெலிவரி செய்யப்பட்ட ஐபோனை ஆசையாக பிரித்து பார்த்த Khaoula-வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஐபோனுக்கு பதிலாக சோப்பு டப்பா ஒன்று பார்சலில் இருந்துள்ளது.
இந்த நிலையில் Khaoula குறித்த நிறுவனத்தை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார். முதலில் பிரச்னை குறித்து ஆராய்ந்து தக்க முடிவு எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை கொடுத்துள்ளது.
இதேவேளை, இச் சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.