இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.
தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு 95 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் அரசாங்கம் பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
எனினும் தனியார் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுடன் அரசாங்கம் ஒருபோதும் சாதகமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டார்.