• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜேர்மனியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.

Feb. 8, 2022

திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனிக்கு வருவதில் உள்ள தடைகளை நீக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்கும் வகையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதை எளிதாக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சரான Robert Habeck கூறியுள்ளார்.

கிரீன் கட்சியைச் சேர்ந்தவரான Habeck, வெளிநாடுகளிலிருந்து வரும் பணியாளர்கள் சந்திக்கும் தடைகளை விளாசியுள்ளார்.

பிரச்சினை என்னவென்றால், வெளிநாட்டுப் பணியாளர்கள் சந்திக்கும் தடைகள் மிக அதிகம் என்று கூறும் Habeck, பட்டப்படிப்புகள் அங்கீகரிக்கப்படுவதில்லை, விண்ணப்பங்கள் தூதரகங்கள் மூலமாகத்தான் பரிசீலிக்கப்படவேண்டியுள்ளது, ஆக, திறன்மிகு பணியாளர்களை எளிமையாக, நீங்கள் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என கூறிவிட்டால் போதாது, அவர்களை வரவேற்பதை சரியாகச் செய்ய நமக்கு ஏராளம் உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது என்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களுக்கு ஜேர்மனிக்கு வருவதற்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என்று கூறும் Habeck, ஆனால், மற்ற திறன்மிகு பணியாளர்களுக்கு அது எளிதல்ல என்கிறார்.

குறிப்பாக தொழிற்கல்வி கற்றவர்கள் உட்பட மற்றவர்களுக்குமான புலம்பெயர்தலுக்கான நடைமுறைகளையும் எளிதாக்கவேண்டும் என்கிறார் அவர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed