• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீடுகளுக்கே தேடி வரும் பூஸ்டர் தடுப்பூசி.

Feb. 5, 2022

வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 615,902 ஆக உயர்வடைந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நேற்று முன்தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,544 ஆக அதிகரித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed