• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காரில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Feb. 5, 2022

டெல்லியில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

காரை தனியாக ஓட்டி செல்பவர்கள் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அபராதம் விதித்து வந்தன இதற்கு டெல்லி வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டெல்லி ஜகோர்ட்டும் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு உத்தரவினை பிறப்பித்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடந்தப்பட்டது.

இந்த நிலையில் காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என டெல்லி சுகாதார இயக்ககம் அறிவித்து உள்ளது. இதனால் கார் ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed