மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறே அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 மெகாவாட் மின்சார பற்றாக்குறை காரணமாகவே…
வெளிநாடொன்றில் இலங்கையர் சுட்டுக் கொலை!
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை (26-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம்…
யாழ். கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்தோனியார் ஆலயம் புனித ஆயர் வசந்தன் அடிகளார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…
லண்டனில் இலங்கையர் கொலை! வெளிவந்த தகவல்
லண்டனில் இலங்கையர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி 6.55 மணியளவில் டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் இலங்கையரான ரஞ்சித் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம்…
சுவிஸில் புதிதாக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று !
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 20 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிஸில் இதுவரையில் 20 இலட்சத்து 82 ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 764…
சுவிட்சர்லாந்தில் கோவிட் இழப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு!
கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவ சுவிஸ் அரசாங்கம் இழப்பீட்டுத் திட்டங்களின் தொகுப்பை நீட்டித்துள்ளது. பணியாளர்களுக்கு 24 மாதங்கள் வரை குறுகிய கால வேலை தொடரும் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகளால் நிறுவனங்கள் பயனடையலாம் என்று பொருளாதார அமைச்சர் Guy…
ஒமிக்ரோன் தொடர்பாக வெளியான புதிய தகவல்.
ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், அது பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒமிக்ரோன் பற்றி ஒரு ஆய்வு நடத்தியதில்…
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு தீவிரம்! சிவப்பு எச்சரிக்கை.
நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்பரவல் மீண்டும் தீவிரமாக அதிகரித்துள்ளது. இவ்வருடத்தில் நிறைவடைந்த 26 நாட்களில் மாத்திரம் 6923 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனரத்ன தெரிவித்தார்.…
முல்லைத்தீவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (26) மாலை முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர…
கனடாவில் காணாமல்போன யுவதி. பின்னர் கிடைத்த அதிர்ச்சித் தகவல்
கனடாவில் அண்மையில் திடீரென காணாமல்போயிருந்த தமிழ் யுவதியான பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்…
தென்மராட்சியில் முதியவர் ஒருவரின் சடலம்.
சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் 62 வயதான முதியவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது வீட்டின் விராந்தையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கிடந்த முதியவர் தொடர்பில் அயலவர்களால் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி…