• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் வரலாறு காணாத அனர்த்தம்!

Jan. 30, 2022

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவிவரும் பனிப்புயல் தாக்கம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் அனர்த்தமானது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக பனிப் பொழிவு பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியு யோர்க், நியு ஜெசி, மேரிலான்ட், வெர்ஜினியா, ரோட் தீவு ஆகிய மாநிலங்களுக்கே அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடலை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், மாநிலங்களுக்கிடையிலான 5000 அமெரிக்க விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொருத்தமான உயிர் காப்பு உடைகளை அணிந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

குடியிருப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளதுடன், 75 மில்லியன் மக்கள் இந்த அனர்த்த வலயத்தினுள் இருப்பதாக தெரிக்கப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed