• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பெப்ரவரி நடுப்பகுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு!

Jan. 29, 2022

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரவுகளைப் பார்த்தால், நவம்பர் மாதம் முதல் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 65% நீர்மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது அது 25% ஆகக் குறைந்துள்ளதாகவும் எனவே மார்ச் தொடக்கத்தில் அல்லது பெப்ரவரி நடுப்பகுதியில் மின்வெட்டு இருக்கும் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed