• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.தெல்லிப்பழையில் இளைஞன் அதிரடி கைது!

Jan. 29, 2022

யாழ்.தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஹெரோயினை எடுத்துச் செல்லும் போதே சுன்னாகத்தில் வைத்து தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (29-01-2022) சனிக்கிழமை யாழ். உச்ச நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed