• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரசித்தி பெற்ற யாழ் கீரிமலை கேணியை முதலில் கட்டியவர் யார் ? 

Jan 29, 2022

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புக்களை எடுத்தக்கூறும் பல இடங்கள் பல தலங்கள் என்பன உள்ளன. அவ்வாறு உள்ள இடங்களின் சிறப்புக்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும் அதனை ஆரம்ப்பித்து வைத்தவர் அல்லது அதற்காக முன்னின்று உழைந்தவர்கள் யார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

அதிலும் நமது இளைய சமூதாயத்தினருக்கு எமது மண்ணின் பெருமையும், எமது வரலாறுகளின் அடிப்படையும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். அந்த வகையில் யாழில் உள்ள புண்ணிய கேணியாக விளங்குவது கீரிமலை கேணி ஆகும்.

இக்கேணில் பிதிர்கடன்களை நிறைவேற்றுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகின்றது. அதோடு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஐந்து ஈச்சரங்களில் ஒன்றாக விளாங்கும் கீரிமை நகுலேச்சர ஆலயத்தின் தீர்த்த கேணியாகவும் கீரிமலை புனித தீர்த்தம் உள்ளது.

கீரிமலை கேணி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அதனை கட்டியவர் யார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தவகையில் ஶ்ரீமான் வல்லிபுரம் என்ற பெரியார் என்பவர்தான் தனது சொந்தச் செலவில் இக்கேணியை கல்லால் கட்டியதாக 1924 இல் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கீரிமலை கேணி குளமாக இருந்த நிலையில், இவ் நன்னீர் ஊற்று வல்லிபுரம் என்ற பெரியாரால் கற்படிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் பின் பெண்கள் நீராட1924 இல் இரு பிரிவாக கேணி மாற்றம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

ஆடி அமாவாசை தினத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நீராடி தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் கீரிமலை தீர்த்தக்கேணி அமைந்த வரலாறு ஆகும்.

அதுமட்டுமல்லாது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா தலமாகவும் கீரிமலை உள்ளது. இயற்கை அழகுடன் கூடிய கீரிமலை கேணியும் அதனை சூழலும்  பலரின் மனதை குளிர்விக்கின்றது என்றால் மிகையாகாது.

மேலும் தற்போது கீரிமலை தீர்த்தக்கேணியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed