கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தங்களது இரத்ததிலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்துக்கொள்வது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.