• Fr. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் புதிதாக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று !

Jan. 27, 2022

சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 20 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிஸில் இதுவரையில் 20 இலட்சத்து 82 ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 764 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 தொற்றால் 220 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 461 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 12 இலட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed