• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஒருவரின் உயிரைப் பறித்த தனியார் வைத்தியசாலை!

Jan 21, 2022

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் சங்கானை, தொட்டிலடியை சேர்ந்த வைத்திலிங்கம் மயூரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோயாளிக்கு இருதய வால்வு சத்திரசிகிச்சை இடம்பெற்றபோது ஏற்பட்ட அதிகளவு குருதிப் பெருக்கே உயிரிழப்பிற்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed