• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

Jan 18, 2022

அசாமில் 3.5 மற்றும் மணிப்பூரில் 3.8 ரிக்டர் அளவுகோலில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed