• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அபுதாபி விமான நிலையம் மீது தாக்குதல்! மூவர் பலி

Jan. 17, 2022

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

டிரோன் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது. அதேநேரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தாற்போது தாக்குதல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.     

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed