• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நடுவானில் பிரசவலியால் துடித்த கர்ப்பிணி பெண் – உதவிய கனடா பெண் மருத்துவர்!

Jan 15, 2022

கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப். இவர், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில் இருந்து உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு, இடம் பெயர்ந்த பெண் தொழிலாளி பயணம் செய்துள்ளார். இவர் ஒரு கர்ப்பிணி பெண். இவருக்கு விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டதுள்ளது.

அப்போது, விமானத்தில் டாக்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்று பணிப்பெண் ஒருவர் விசாரித்துள்ளார். உடனே டாக்டர் ஆயிஷா எந்த தயக்கமும் இல்லாமல், தன் இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தில் கூட்டமாக இருந்த இடத்துக்கு சென்றார்.

அவர் யாரேனும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலையில தவித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று கருதினார். ஆனால் அங்கே பிரசவ வலியில் கர்ப்பிணிப்பெண் துடித்துக்கொண்டிருந்தார்.

இதன் பின்னர் டாக்டர் ஆயிஷா பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு அந்த விமானத்தில் பயணித்த நர்ஸ் ஒருவரும், குழந்தை நல மருத்துவர் ஒருவரும் உதவினர்.

இதனையடுத்து, 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந்த பிரசவத்தில் கர்ப்பிணிப்பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நல்லமுறையில் பிரசவம் பார்த்த அந்த குழந்தைக்கு டாக்டர் ஆயிஷாவின் பெயரை ‘மிராக்கிள் ஆயிஷா’ என்று வைத்துள்ளனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், பதிக்கப்பெற்றிருந்த தனது தங்க கழுத்தணியை (நெக்லஸ்) புதிதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு பரிசாக அளித்தார்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed