• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமண நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம்

Jan. 14, 2022

பாணத்துறை – கொரகான பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த  இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் 13.01.2022 வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

வாதுவ – பொதுபிடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய நிஷான் லக்ஷான் ஜயரத்ன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று உயிரிழந்த குறித்த இளைஞர் தனது நண்பியின் திருமாண நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது  ஏனைய  நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

பின்னர் பாணத்துறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் , மரண விசாரணைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed