• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின்125ஆவது நினைவுதினம்!

Jan 13, 2022

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தினை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் 125 ஆவது நினைவுதினம் திருகோணமலையில் நினைவுகூறப்பட்டது

1893 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தா அவர்கள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி வரை சென்ற பயணமானது வரலாற்று சிறப்புமிக்க இலங்கை விஜயமாக ஆண்டாண்டு காலம் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இன்றைய தினம் (13) அந்த விஜயத்தின் 125வது வருட நினைவினை ஒட்டி திருகோணமலை சிறீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபர் பத்மசீலன் அவர்களின் தலைமையில் திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரியில் இருந்து நடைபவனியாக திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வரை சென்று ஓர் ஆண்டு விழா முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வினை கல்லூரிகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், இந்து மன்றம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழையமாணவர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது

இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சிறீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹாராஜ், பிரதம அதிதியாக இந்தியாவின் கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் ஸ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ், விசேட அதிதிகளாக திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன்,கிழக்கு மாகாண தொற்றுநோய் இயல் நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். அருட்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed