• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா மாகாணங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

Jan. 8, 2022

ஒமிக்ரான் மாறுபாட்டை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில மாகாணங்களுக்கு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Jean-Yves Duclos எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65% அதிகரித்தது.

மேலும், ஊழியர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைகள் கவலை தெரிவித்தன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து நாட்டின் சுகாதார அமைச்சரை் Jean-Yves Duclos கூறியதாவது, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நிலவும் நிலைமையை மற்ற மாகாணங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் இரண்டு மாகாணங்களும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த இரண்டு மாகாணங்களும் மிகவும் கடினமான காலத்தை கடந்து வருகின்றன. இது மற்ற மாகாணங்களுக்கான ஒரு சிக்னல், இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் இதே நிலை மற்ற மாகாணங்களிலும் ஏற்படலாம்.

மாகாணங்களுக்கு தேவையான உதவியை வழங்க மத்திய அரசிடம் போதுமான வளங்கள் இல்லை.இது சில மாகாணங்களுக்கான எச்சரிக்கை தான், மாகாணங்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.    

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed