• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மூதாட்டியிடம் கைவரிசைக் காட்டிய திருடர்கள்

Jan. 6, 2022

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வயோதிபப் பெண் இன்று  சிகிச்சைக்காக எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தங்கச் சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றை கழற்றி கைப்பையில் வைத்துள்ளார். திரும்பி வந்து கைப்பையை பார்த்தபோது, அதில் இருந்த நகைகள் திருடு போனதை கண்டு, வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் வைத்தியசாலை பொலிஸில் புகார் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு வருபவர்கள் நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பலமுறை எச்சரித்து வருகிறது.

தினமும் ஏராளமானோர் மருத்துவ சாலையில் சென்று வருவதால், சிகிச்சைக்கு வருபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து வருவதால், உடமைகளை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed