• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

Jan 4, 2022

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயலியென் நகரம். இந்த நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுடிருந்தது. 19 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால், கட்டிடங்கள் குலுங்கின.

பரபரப்பான காலை நேரம் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதாலும் மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. 2018 ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed