• Di.. Jan. 28th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்த ஆண்டு நாட்டில் வீதி விபத்து! 2,400 க்கும் மேற்பட்டோர் பலி.

Dez. 31, 2021

2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இவ்வாண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 27 வரை இடம்பெற்ற 23,25 வீதி விபத்துகளில் 2,419 பேர் உயிரிழந்துள்ளனர்.

697 பாதசாரிகளும், 901 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மோட்டர் சைக்களின் பின்னாலிருந்து பயணித்த 152 பேரும், ஏனைய வாகனங்களின் 243 சாரதிகளும், 246 பயணிகளும், 184 சைக்கிள் ஓட்டுநர்களும் மற்றும் ஏனைய 14 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் பதிவான விபத்துக்களினால் 13,469 பேர் காயமடைந்துள்ளனர். இவற்றுள் படுகாயங்கள் 5,263 ஆகம், சிறு காயங்கள் 8,216 ஆகும் என்றும் பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் கூறியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed