சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது சட்டவிரோதமானது என்று சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
அந்த வகையில், இந்த குற்றத்திற்காக ஒருவர் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதற்காகவே ‘கொரோனா வைரஸ் பார்ட்டிகள்’ (Coronavirus Parties) ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மத்தியில் இது பிரபலமடைந்துள்ளது. தடுப்பூசி பெறாமலேயே ஹெல்த் பாஸைப் பெறுவதற்காகவே நோய்த்தொற்றுக்கு ஆளாக விரும்புகின்றனர்.