• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் தமிழ் இளைஞர் படுகொலை!

Dez. 26, 2021

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன்(19 வயது) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 1-888-579-1520 ext என்ற இலக்கத்துடன் ,தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed