• Sa.. März 8th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்கான் பெண்களுக்கு மேலும் ஒரு தடை!தாலிபான்கள் அதிரடி

Dez. 26, 2021

72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தலிபான்கள்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனையடுத்து, ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாக பயணிக்க தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது” என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களை ஒளிபரப்ப ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்தது. அதேபோல், தொலைக்காட்சியில் பங்கேற்கும் பெண் பத்திரிகையாளர்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed