மகாலட்சுமியை வசியம் செய்ய வேறு என்ன வழிகள் உள்ளது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் வரிசையில் செம்பருத்தி பூ விற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்றும், புதன்கிழமை அன்றும் சிவப்பு நிறத்தில் ஒற்றை அடுக்கில் ஐந்து இதழ்களைக் கொண்ட செம்பருத்திப்பூவை மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்து வருவதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருளில் ஏலக்காயும் அடங்கும் . அதேபோல் கடவுளை வசியப்படுத்த கூடிய தன்மை பன்னீருக்கு அதிகமாகவே உள்ளது.
ஏலக்காயை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து, ஒரு சிறிய டம்ளரில் கொஞ்சமாக பன்னீரை ஊற்றி, அதில் ஏலக்காய் பொடியை போட்டு வெள்ளிக்கிழமை பூஜையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை காலை இந்த பூஜையை செய்து விட்டு, அதன் பின் அந்த தண்ணீரை எடுத்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டால், வீட்டில் மகாலட்சுமி நிறைந்திருப்பாள்.
மகாலட்சுமிக்கு விருப்பமான பல பொருள்கள் இருந்தாலும் நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருள்களின் பட்டியலில் செம்பருத்திப் பூ, ஏலக்காய், பன்னீர் இந்த மூன்று பொருட்களும் அடங்கும். முடிந்தவரை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது மகாலட்சுமிக்கு வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வாசனை மிகுந்த தூபங்கள் போடுவதோடு, மகாலட்சுமிக்கு பச்சைக் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வதும் சிறப்பானது.