பூமியானது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் செல்கின்றது. இந்த நிலையில், பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.